புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அங்கி ஒன்று பாதுகாப்பு தரப்பினரால் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.யாராவது இதனை எடுத்து வந்து இங்கு வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.