பாசிச சகோதரப் படுகொலைக்கு சிக்குண்ட தோழர் சின்ன மெண்டிஸ்
மரணம் 14.01.1987
தோழர்: விஜயபாலன்(சின்னமெண்டிஸ்) 31வது ஆண்டு நினைவுதினம்!
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தளபொறுப்பாளர் தோழர் சின்னமெண்டிஸ் அவர்களது 31வது நினைவு இன்றும் எம் நெஞ்சங்களைவிட்டு அகலா துயருடன் நினைவுகூருகின்றோம்.
யாழ் உடுவிலை பிறப்பிடமாக கொண்ட விஜயபாலன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தளபொறுப்பாளராக மெண்டிஸ் என்ற புனைபெயருடன் இருந்துவந்த நிலையில் “ஏக உரிமை” போராட்ட வெறியாட்டத்தில் பலியாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவரானார்.பழகுவதற்கும் மிகவும் மென்மையான பண்புகளை கொண்டிருந்த மெண்டிஸ் தோழர்கள் மற்றும் பொதுமக்கள்; மத்தியில் மிகவும் மதிக்கப்பட்ட ஒர் தளபதியாக செயலாற்றி வந்த நிலையிலேயே, வெறிகொண்ட கொடியவர்களின் கைகளில் சிக்கி தோழர் மெண்டிஸ் பலியெடுக்கப்பட்டார்.
தனக்கு வளங்கப்பட்ட பதவியை அதிகார மோகத்துடன் கைக்கொள்ளாமல் தன்;னுடன் தனது பாசறையில் இருந்த தோழர்களை மிகவும் கன்னியத்துடனும், மிகுந்த மரியாதையுடனும் வளிநடாத்திய ஒர் தளபதி.
பொறுப்புடனும், கன்னியத்துடனும் செயலாற்றிய தோழர் மெண்டிஸ், சக தோழர்களின் உணர்ச்சிகளிற்கு இடமளிக்காமல் தலைமையிட்ட கட்டளைக்கு அமைவாக தனது பாசறையில் இருந்த தோழர்களை வழிநடாத்தி ஒர் சிறந்த தலைமைத்துவ பண்புடன் செயலாற்றிய வீரன்.
யாழ் குடாநாட்டினைவிட்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வெளியேற முடியாத நிலையை உருவாக்கிய வீரர்களில் ஒருவர். யாழ் குடாநாட்டில் அமைந்திருந்த இராணுவ முகாம்களை விட்டு சிங்கள இராணுவத்தினர் வெளியேற முடியாதவாறு முடக்கப்பட்டபோது, யாழ் கோட்டை, பருத்தித்துறை, வசாவிளான் முகாம்களை விட்டு வெளியேற முடியாமல் கடுமையான பாதுகாப்பு அரண்களை தனது பிராந்திய தலைவர்கள் ஊடாக உருவாக்கிய சிறந்த இராணுவ நுணுக்கங்களை கொண்ட தளபதி.
முகாமைவிட்டு இராணுவத்தினர் வெளியேறி மக்களை தமிழ் மக்களை கொன்றொளிக்கும் வெறியாட்டத்தில் இருந்து பாதுகாத்த மக்கள் காவலன்.
கோட்டை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் அன்று அமைக்கப்பட்ட காவலரன் ஊடாக எத்தனையோ முறை இராணுவத்தினர் வெளியேற எத்தனித்து பயனற்ற நிலையில், முகாமிற்குள் முடங்கியவாறு அங்கிருந்தே ஆட்டிலறி ஷெல் தாக்குதல்களை மக்கள் குடியிருப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மீது ஏவியபோது அதற்கும் மாற்று வளியினை தனது சக தளபதிகளின் உதவியுடன் உருவாக்கி மக்கள் தற்பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பு அரண்களை அமைத்தும், இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொள்ளும் சமயங்களில் ஆபாய எச்சரிக்கைகளை(சைறன்) எழுப்பியும், மக்களை பாதுகாப்பதற்கான யுக்திகளை கையாண்ட செயல்வீரன்.
அவரது இந்த செயற்பாடுகளிற்கு செயல்வடிவம் கொடுத்த பல தோழர்கள் இன்றும் உம் நினைவுகளை சுமந்து கொண்டே வாழ்கின்றோம் தோழரே.
விடுதலை போராட்டம் திக்கு தடுமாறி பயணித்து சகோதர யுத்தம் வடகிழக்கில் உச்சகட்டத்தை நோக்கி பயணித்தபோதும் தன்னுடன் இருந்த தோழர்களையும் தனது அமைப்பையும் கன்னியத்துடன் பாதுகாப்பாக வளிநடாத்திய ராஜதந்திரவாதியும் கூட. “ஏக உரிமைக்கான” போராட்டமாக விடுதலை போராட்டம் திசைமாறியபோது சக விடுதலை அமைப்புக்கள் ஒவ்வொன்றாக வேட்டையாடப்பட்டபோது, அவ் போராளிகளை பாதுகாப்பாக இந்தியா அனுப்பியும் வைத்த ஒர் மகத்தான தோழன்.
இவ்வாறாக சகோதர யுத்தம் வடகிழக்கில் உச்சம் பெற்றிருந்தபோது அதனால் ஏற்பட போகும் பேரழிவுகளை நன்றாக உணர்ந்த தளபதி மெண்டிஸ் இவ் சகோதர மோதலில் சிக்குண்டு அநியாயமாக எமது உறவுகளையே அழித்து நாமும் அழியவேண்டிய துர்ப்பாகிய நிலை வேண்டுமா என்று சிந்தித்த நிலையிலேதான் ஒர் முடிவுக்கு வந்தார். ஏற்பட்டுள்ள இந்த மோதல் நிலையை தவிர்ப்பதற்கு ஏதுவாக புளொட் அமைப்பின் அனைத்து செயற்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி கொள்வது என்று.
இதனை தொடர்ந்து தமது இந்த முடிவினை தெளிவுபடுத்தி ஊடாக அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் ஊடாக வெளியிட்டுவிட்டு தனது தோழர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கையாண்டார்.
பல தோழர்களை மீண்டும் பாதுகாப்பாக பின்தளமாக செயற்பட்ட இந்தியாவிற்கும் ஏனைய பகுதிகளிற்கும் நகர்த்திவிட்டு தான் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் தனக்கும் விடுதலை புலிகளின் கிட்டுவுக்கும் ஒர் சுமுக நிலை உள்ளது தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்துடன் யாழில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தபோதே விசாரணை என்ற பெயரில் வந்த விடுதலை புலிகளால் அழைத்து செல்லப்பட்டு மிகவும் கொரூரமான சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப்பட்டு 1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதி கொல்லப்பட்டு விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட துயரம் நிறைந்த நாளாகும்.
தோழனே நீ எம்மை வழிநடாத்திய பாதைகள் என்றும் தெளிவாகவே இருக்கின்றது தோழனே.
உனது கனவுகளும், நனவுகளும் மெய்ப்படும் நாள் ஒர் நாள் உருவாகியே தீரும். நீ விட்டு சென்ற நாமங்களை நாம் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் சுமந்த வண்ணமே உள்ளோம் தோழா. உன்னை அன்று கருவறுத்து இன்பம் கண்டவர்களின் வரலாறு என்னவாகியது என்பதையெல்லாம் நீ காணாவிட்டாலும் நாம் கண்டுகொண்டோம்.
ஆகவே அந்த கொடூரங்களை கண்டு நாம் ஆர்ப்பரிக்கவில்லை. உனது கனவும் நனவும் மெய்ப்பட வேண்டும் என்பதே எமது நோக்கு. அது ஒர் நாள் நிறைவேறும் தோழனே.