பிணைமுறி மோசடி அறிக்கைக்கு அமைவாக சட்டநடவடிக்கை எடுக்க உத்தரவு
பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக சட்டத்தை செயற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டதாக கூறினார்.