மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து செயற்ழுவுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்தக் குழு அமைச்சர் திலக் மாரப்பன்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறினார்.