ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டுள்ளனர்.

எனவே அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தமது ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமையை கண்டித்து, மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணி நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்