இலங்கையின் சமுக பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரந்ஜித்சிங் சந்து இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளும் இந்த ஆண்டு 70வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், அது தொடர்பில் இடம்பெற்ற கலாசார நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். இந்தியா எப்போதும் இலங்கையுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் இந்தியா உதவிகளை வழங்கும் அவர் குறிப்பிட்டுள்ளார்.