ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு சபையின் 21வது கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஆனால் எஞ்சியுள்ள பொறிமுறைகளையும் துரிதமாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.