யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 3வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 03 வயதுடைய தனுசன் நித்தியா மற்றும் 33 வயதுடைய ஈஸ்வர் ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் பலமேஷ்வரி (55) என்ற சிறுமியின் பாட்டி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.