ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றையதினம் கைவிடப்பட்டுள்ளது. சேவையிலிருந்து பலவந்தமாக தம்மை நீக்கியதாகத் தெரிவித்து ஊழியர்கள் சிலர் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர். கடந்த 09ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டு வந்தனர்.