தேர்தல் சட்டங்களுக்கு உட்படுத்த முடியாத வகையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தலை இலக்காகக் கொண்டு பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் சம்பவங்கள் மாத்தளை மாவட்டத்தின் லக்கலை மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களில் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த செயற்பாட்டுடன் தேசிய மட்ட அரசியல் பிரதிநிதி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.