இலங்கை வந்துள்ள நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானி, ஜெனரல் ராஜேந்திர சேத்திரி இன்று முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டரில் முல்லைத்தீவிற்கு சென்ற நேபாள இராணுவப் பதவி நிலை பிரதானியை முல்லைத்தீவு படைத்தலைமையகத் தளபதி வரவேற்றுள்ளார். இதன்போது இலங்கை இராணுவத்தின் 24ஆவது சிங்கப் படைப்பிரிவின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றுள்ளது. படைத்தலைமையகத்தில் படைத்தளபதிகளுடன் ஜெனரல் ராஜேந்திர சேத்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.