2017 – 2018ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்கும் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் மேலும் ஏழு நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடக விண்ணப்புக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.