வவுனியா ஓமந்தை புகையிரத நிலையத்தின் அருகாமையில் பிரதேச மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஓமந்தை மற்றும் விலத்திகுளம் பிரதேசங்களில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள குறுக்கு விதிக்கு புகையிரத பாதுகாப்பு கடவையை அமைக்குமாறு கோரி மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.