மாணவர்களின் மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திலிருந்து ஆங்கில பாடத்தை கற்பிக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலுக்கு அமையவே இத்திட்டம் உருப்பெற்றுள்ளது. இவ்வாறு ஆரம்ப வகுப்புக்களில் ஆங்கில பாடவிதானத்தை கற்பதற்கு தேவையான பாடப் புத்தங்களை அச்சிட்டு வினியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்காக ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.