தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு பெற்றுத் தரப்படும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பலங்கொடையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாடளாவிய ரீதியில் சுமார் 650,000 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. இந்த வழக்குகள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படும். “குற்றவாளிகளுக்கும் கொலையாளிகளுக்கும் உரிய தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டியது நீதிமன்றங்களினது கடமை. ‘சில் துணி’ விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் எவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டதோ, அதேபோன்று ஏனைய வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விரைவில் பெற்றுத் தரப்படும்.” என்றார் அவர்.