பிரபல விமான சேவைகள் நிறுவனமான இண்டிகோ, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய விமான சேவைகளை நேற்று ஆரம்பித்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து இலங்கைக்கு நாளொன்றுக்கு மூன்று விமான சேவைகளை நடத்த இண்டிகோ திட்டமிட்டுள்ளது. இதன் முதல் விமானம் சென்னையில் இருந்து நேற்றுக் காலை 8.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதை வரவேற்கும் முகமாக வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணங்களையே அறவிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்த விமான சேவையின் இலங்கைப் பங்காளராக ஹேமாஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.