பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக் காண, அவரது கணவர் நேற்றுப் பகல் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு, தன் பொலிஸ் மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தைத் தொடர்ந்து, திடீரென அந் நபர், தன் வசமிருந்த நஞ்சு போத்தலைத் திறந்து நஞ்சை அருந்திவிட்டார். இதைக் கண்டு பதறிய பொலிஸ் மனைவி, சக உத்தியோகத்தர்களின் உதவியுடன் தன் கணவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தார். குடும்பத் தகராறு காரணமாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை கிளிநொச்சி பூநகரி 66வது படைத் தலைமையகத்தில் இராணுவவீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்றுகாலை அவரது கைவசம் இருந்த ரி56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்பட்டவேளை, சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயமடைந்த நிலையில், சக இராணுவ வீரர்களினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.