வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் 2ம் வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரையும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கவுரையும் நேற்று மயிலணி ஜனசக்தி சனசமூக முன்றலில் இடம்பெற்றது.

இதில் வேட்பாளர்களான திரு. சுதர்சன், திரு. லோகராஜன் ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.