விசேட தேவையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதாயின், பிரதேச தெரிவத்தாட்சி அதிகாரியிடம் போக்குவரத்து வசதியை கோரி விண்ணப்பபடிவத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்து சேவை ஊடாக வாக்காளர் நிலையத்திற்கு செல்லமுடியாதாயின் அது தொடர்பில் குறித்த நபரால் அல்லது அவர் சார்பான வேட்பாளர் அல்லாத வேறு ஒரு நபரால் விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.இந்த வசதியை பெறுவதற்கு தேர்தல் இடம்பெறுவதற்கு 7 நாட்கள் முன்னர், அதாவது பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரி திருப்பதியடைந்தால் அந்த நபருக்கு விசேட போக்குவரத்து வசதியை பெற்றுகொள்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படும். அவ்வாறு விண்ணப்பப்படிவம் முன்வைக்கும் நபர், தமக்கு பொது போக்குவரத்து சேவையிலோ, நடந்தோ வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாது என பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரின் சான்றிதழுடன், விண்ணப்பம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அது உதவியாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.