யாழ். விடத்தற்பளை கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் 14ம் வட்டாரத்திற்கான வேட்பாளர்களான திரு. மயூரன், செல்வி. அருட்சோதி ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளர் ஆசிரியர் தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதுடன், சமகால அரசியல் நிலைமைகளையும் பொதுமக்களுக்கு விளக்கினார்கள்.