சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், 3 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்த ஊடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமருடனான சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தக பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.