உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்றுகாலை 9மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. மாலை 4மணிவரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 560,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகின்ற தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்கு தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 600 கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.