மன்னார் – பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய மீன் வாடி ஒன்றில் நேற்றிரவு திடீர் என ஏற்பட்ட தீயின் காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.
பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த சுமந்தன் என்ற மீனவரது வாடியே எரிந்து சாம்பலாகியுள்ளது. இதன்போது மீன்பிடி படகின் வெளி இணைப்பு இயந்தியம், மீன் பிடி வலைகள் உட்பட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இவ்வாறு எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீனவர் கவலை தெரிவித்தார்.குறித்த மீன் வாடியில் தீ ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாநிலையில் குறித்த வாடியை இனம் தெரியாதவர்கள் தீ வைத்து எரியூட்டியிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த தீப்பரவல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.