யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் வருட மாணவர்களான அவர்கள், கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு, 4ம் வருட மாணவர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் சார்பில் பிணைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, நீதவான் அதனை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.