வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் காண்டீபனின் தேர்தல் காரியாலயம் நேற்றுமாலை 4.30மணியளவில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத் தலைவரும், மாகாணசபை உறுப்பினருமான டொக்டர் சத்தியலிங்கம், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சேனாதிராஜா, சுந்தரலிங்கம் காண்டீபன், சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), சி.இரவீந்திரன்(வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர்), சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை, அகிலா நாகேந்திரம், கந்தையா கேதீஸ்வரன், கருணாநிதி ஹரிப்பிரசாத் உள்ளிட்ட வேட்பாளர்களும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ரஞ்சன் மற்றும் ஆதரவாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர் பொருளாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.