சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ஜெய்சேகரம், பா.கஜதீபன், ஆ.பரம்சோதி உட்பட மாநகர வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.