வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 12ம் வட்டாரத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(22-01-2018) யாழ். சுன்னாகம் மின்சாரநிலைய வீதியிலுள்ள கலைவாணி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான கௌரவ த.சித்தார்த்தன், வடமாகாணசபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வேட்பாளர் இ.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு அப்பிரதேச மக்களுக்கு இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியின் அவசியம் குறித்து விளக்கினர். இந்நிகழ்வுக்கு கிராமத்தின் முக்கியஸ்தர் திருமதி. சிவாஜினி தலைமை தாங்கினார்.