யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான லட்சுமிகாந்தன், லோகராஜன், தர்சன் ஆகியோருக்கு ஆதரவுகோரி தேர்தல் பரப்புரை கூட்டமொன்று நேற்றையதினம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வேட்பாளர்களுடன் புளொட் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் தர்சானந்த் மற்றும் வலி தெற்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அபராசுதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள்.