கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கமலவதனா (கமலி) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை தனது 6வயது மகனுடன் ரயிலிலிருந்து மற்றுமொரு ரயிலிற்கு மாறும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மகன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.