இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று அவர் வருகை தருகின்றார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகள் பற்றி இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.