வட மாகாண சபைக்கான புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இந்நியமனங்கள் தொடர்பில் வட மாகாண சபை செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, வட மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னல்ட் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சபாரத்தினம் குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மற்றுமொரு உறுப்பினரான மொஹமட் ரயீஸ் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அப்துல் நியாஸ் சீனி மொஹமட் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுள், சபாரத்தினம் குகதாஸ் வட மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்னிலையில் நேற்று சத்தியபிரமாணம் செய்துள்ளார்.