Header image alt text

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை 342 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 38பேர் இம்முறை உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 26 முறைபாடுகள் கிடைத்துள்ளதுடன் அது தொடர்பாக 16 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க சபாநாயகர் கருஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துள்ளமையால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

two young women taking selfie with mobile phone

திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, நேற்று படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27, 28 வயது பல்கலைக்கழகa யுவதிகள் எனவும் அவர்கள் இருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹ_ல் தெரிவித்தார். Read more

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இருத்தரப்பினருக்கும் இடையில், சில எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்லின் பின்னர் இந்நிலை மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையில், தேசிய அரசாங்கம் பலத்துடனேயே தொடரும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.