உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க சபாநாயகர் கருஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துள்ளமையால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்துக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.