பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹ_ல் தெரிவித்தார். பாராளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதுபற்றி தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.