எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இருத்தரப்பினருக்கும் இடையில், சில எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்லின் பின்னர் இந்நிலை மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையில், தேசிய அரசாங்கம் பலத்துடனேயே தொடரும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.