துருக்கியின், கிரேக்கம் மற்றும் பல்கேரிய எல்லையோடு ஒட்டிய எடிரன் மாகாணத்தில் பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, பங்களாதேஸ், பாகிஸ்தான், மியன்மார், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 240 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துருக்கியில் தங்கி இருப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் எவையும் இல்லாத நிலையிலேயே அவர்கள் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் துருக்கியில் இருந்து எல்லைத்தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக தயாராக இருந்ததாகவும் அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.