உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை கையேற்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை அண்மித்ததாக நடைபெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதே இதன் நோக்கமென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே முறைபாடுகளை தெரிவிப்பவர்கள் 24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088135 அல்லது 0773 762112 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், 0112 505574 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைப்பாடுகள் செய்யமுடியுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.