பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி விசாரணைகள் அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை என்றும்

ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நடக்கவிருக்கும் 8ம் திகதி விவாதம் தொடர்பாக அதனை நிறுத்தவோ அல்லது வேறு தீர்மானம் வழங்கவோ தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித அதிகாரமும் இல்லையெனவும்,

மேலும் சபாநாயகர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று மௌனகாலம் நிலவும் எட்டாம் திகதியை தவிர்த்து அதற்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் பாராளுமன்ற விவாதத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் நிலைப்பாட்டிலேயே தேர்தல் ஆணைக்குழு காணப்படுகின்றது எனவும் எம்.எம். மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.