உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7000 தொண்டர்களை தயார் நிலையில் இருப்பதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 1000 பேர் தபால்மூல வாக்களிப்பு பணிகளின் கண்காணிப்பு பணிகளிலும், 4000 இற்கும் மேற்பட்டடோர். பேர் வாக்களிப்பு நடைபெறும் இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், 1500பேர் 350 நடமாடும் வாகனங்கள் மூலம் நடமாடும் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக பஃரல் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ ஜயலத் குறிப்பிட்டார். மருதானையில் அமைந்துள்ள சமூக நல கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.