இலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் கண்டி நாளைய தினம் தலதா மாளிகைக்கும், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன், எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பாடசாலைக்குச் சென்று மாணவர்களின் கலைநிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.