கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின்போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனயவுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும்போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மீது தாக்குதல் நடத்தும்போது பதில் தககுதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது. வெலிக்கடை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ இதனை நீதிவானுக்கு நேற்று அரிவித்தார். இந் நிலையில் சட்ட மா அதிபரின் அலஓசனை பிரகாரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ப்ட்ட இந்த விவகாரத்தில் தொடர்புபட்ட ரீ 56 ரக துப்பககிகள் 156, எம்.எம். ரக ரிவோல்வர்கள் 5 உள்ளிட்ட 161 துப்பககிகளையும் அரச இரசாயன பகுப்பயவுக்கு அனுப்ப நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.

நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ நீதிவானுக்கு சமர்பித்த மேலதிக விசாரணை அறிக்கையின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்பற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளுக்காக ஆயுதங்கங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். நிலைமையானது இதன்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளது.

இந் நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றிவளைத்துள்ளது. இதன்போது 2009 நவம்பர் 9ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச் செல்ல சிலர் முயன்றுள்ளனர். இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடைந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப் படை நடாத்திய துப்பாககிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலையீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்பின்னர் தெரிவு செய்யப்ப்ட்ட 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்தபத்து,மொஹமட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன, அசரப்புலிகே ஜோதிபால, ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா, சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுபேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் உள்ளன.

சிறைக் கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக சாட்சிகள் உள்ளன. என குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் சுட்டிக்கடடப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை மன்றில் சமர்பிக்கப்பட்ட ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் மீள விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த சிறைக் கலவரத்தின் போது 27 பேர் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் பெயர் பட்டியலை அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயகொடி வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி

01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)

02. கமகே சமந்த பெர்ணான்டோ

03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)

04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)

05. ரணசிங்க ஆராச்சிகே ஜனக வசந்த (ஹொரண)

06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)

07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிசை)

08. ராமநாதன் பாலபெருமான் (பண்டாரவளை)

09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)

10. மலிந்த நிலேத்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)

11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜூ ஸ்ரீ (பிலியந்தலை)

12. நிர்மல அத்தபத்து (பிலியந்தலை)

13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)

14. சுசந்த பெரேரா (ரத்மலானை)

15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)

16. மலித் சமீர பெரேரா எனும் கொண்ட அமித் (தெஹிவளை)

17. திஸ்ஸ குமார (கேகாலை)

18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)

19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)

20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார

21. வல்லகே லலத்த விஜேசிறி (காலி)

22. ரத்னவீர படபெதிகே வெஸ்லி (காலி)

23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)

24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)

25. மொஹமட் ரம்சதீன் தௌபர் (அக்கரைப்பற்று)

26. கன்னலு பெருமாராச்சிகே பிரியந்த (கரத்தெனிய)

27. லியனாராச்சிகே அநுர (பொரலஸ்கமுவ) ஆகிய 27 பேர் கொல்லப்ப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலேயே தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்து அதனை நிறைவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.