தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த சிறார்களுக்கான இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி நேற்று முன்தினம் 158 சிறார்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தினால் இந்த பிறப்புச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடந்த திங்கட்கிழமை மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள முகாமிகளில் 184 சிறார்களுக்கு இந்த சான்றிகழ்கள் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.