இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும் என்று, இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வகீஸ்வரா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது. இந்தவிடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்க்க வேண்டும். இதற்காக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தி இருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற படகுகளுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் அதற்கு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிலையிலேயே சித்திராங்கனி வகீஸ்வரா இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.