நுவரெலியா மாவட்டத்தின் ராகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியெற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகல, லிடெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களின் 107 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதவிர காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ருக்சைட், செனரத்புரா, ஹால்கன்ஓய பிரதேசங்களைச் சேர்ந்த 41 குடும்பங்களின் சுமார் 200 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது ஹால்கன்ஓய தமிழ் மகா வித்தியாலயம் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.