கியூப புரட்சியாளர் பிடல் காஸ்டோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட்(வயது 68). மனவிரக்தியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் அணுசக்தி இயற்பியலாளராக கடமையாற்றிய டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் அகாடமியின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டயஸ் பலார்ட், மன அழுத்தத்திலிருந்து விடுபடாத காரணத்தினால் விரக்தியடைந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி அந்த நாட்டிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2016-ஆம் ஆண்டு தனது 90-ஆவது வயதில் உயிரிழந்தார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் தற்கொலை செய்துள்ளார்.