குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியாவதற்கு அல்லது பதிவு செய்துக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் அமுலாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் அமுலில் இருக்கும். இந்த காலப்பகுதியை பயன்படுத்தி, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.