தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்றுமுதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் குறித்த முறைப்பாடுகளை பின்வரும் படிமுறைகளின் ஊடாக குறுந் தகவல்களாக அனுப்பி வைக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி EC <இடைவெளி, EV <இடைவெளி, குறித்த மாவட்டம் <இடைவெளி, முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.மேலும், வட்ஸ்அப் (0776 645 692) மற்றும் வைபர் (0712 550 780) ஊடாகவும் தேர்தல் முறைப்பாடுகளை புகைப்படங்களாகவோ காணொளிகளாகவே தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.