இந்திய மத்திய அரசாங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 150 கோடி ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார். இந்த வரவு செலவு திட்ட உரையின் போது இலங்கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாக அவர் கூறினார். இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்ததுடன் அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு நடவடிக்கையும் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.