கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு அமைவாக கடந்த 01ம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நேற்றையதினம் கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி அத்திடிய பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.