மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறி விநியோக மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனும் சந்தேகத்திற்குரியவராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்க்கது.